JobVibe.lk - Sri Lanka Job Portal

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட உலர்ந்த முந்திரி கொட்டைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் ஆலங்குடா மற்றும் பங்களாவத்தையில் கைது

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டியின் ஆலங்குடா மற்றும் பங்களாவத்த கடலோரப் பகுதிகளில் இலங்கை கடற்படை  செவ்வாய்க்கிழமை (10) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​ சுமார் ஆயிரத்து எண்ணூற்று நாற்பது (1840) கிலோகிராம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த முந்திரி கொட்டைகளுடன், இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு (02) லொரிகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.


கற்பிட்டியின் ஆலங்குடா மற்றும் பங்களாவத்த பகுதிகளில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயா நடத்திய இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, ​​சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) லொரிகள் சோதனை செய்யப்பட்டன. அந்த நேரத்தில், இரண்டு (02) சந்தேக நபர்களையும் இரண்டு (02) லொரிகளையும் கடற்படையினர் கைது செய்தனர். மேலும், நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் நாற்பத்தாறு (46) பார்சல்களில் அடைக்கப்பட்ட சுமார் ஆயிரத்து எண்ணூற்று நாற்பது (1840) கிலோகிராம் உலர்ந்த முந்திரி பருப்புகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. 


இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நுரைச்சோலை மற்றும் ஆலங்குடா பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேக நபர்கள், உலர்ந்த முந்திரி கொட்டைகள் மற்றும் இரண்டு (02) லொரிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال