JobVibe.lk - Sri Lanka Job Portal

மலையக மக்களின் டித்வா பாதிப்பு தொடர்பான ஆவணம் கையளிப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையக மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் மீள்கட்டுமானம்  தொடர்பாக “மலையக மீள்கட்டமைப்பிற்கான  சிவில் அமைப்புகளின் கூட்டிணைவு ”  தயாரித்து வெளியிட்ட ஆவணம், வியாழக்கிழமை (26) ஜனாதிபதி செயலாளர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது


இந்த நிகழ்வில், மலையக மறுசீரமைப்பிற்கான சிவில் அமைப்புகளின் கூட்டிணைவின்  பிரதிநிதிகளுடன், பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


அத்தோடு பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதி  செயலாளரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவருடன், நீண்ட நேரம் மலையக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியதாகவும் பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் என்டன் ஜேசுதாஸன் தெரிவித்தார்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال