JobVibe.lk - Sri Lanka Job Portal

இளம் தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு கௌரவித்த "ஆர்.ஜே. மீடியா"

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

"முயற்சிக்கு என்றும் முதலிடம்" எனும் மகுட வாசகத்துடன் ஊடகத் துறையில் தடம் பதித்து வரும் ஆர்.ஜே. மீடியா ஊடக வலையமைப்பின் மற்றுமொரு மைல்கல்லாக, இளம் தொழில் முயற்சியாளர்களைக் கௌரவித்து விருது வழங்கும் விழா (26) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) மிக விமர்சையாக இடம்பெற்றது.


நாடளாவிய ரீதியில் சிறந்த முறையில் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


ஆர். ஜே. மீடியா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஏ.எம். இன்ஷாப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறந்த சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக, சம்மாந்துறை பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தரும் விரிவுரையாளருமான ரஸ்மி மூஸா கலந்து சிறப்பித்தார்.


கௌரவ அதிதியாக கொழும்பு மாநகரசபை உறுப்பினர் மொஹமட் நௌபர், வெடிங் ட்ரீம் அகாடமி பணிப்பாளர் எப். தரூபா, நிர்வாக மற்றும் பல சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு  விருதுகளை வழங்கி வைத்தனர்.


தமது கடின உழைப்பால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு கௌரவித்த இந்த நிகழ்வானது, எதிர்கால இளம் தலைமுறையினருக்கு பெரும் உந்துதலாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال