JobVibe.lk - Sri Lanka Job Portal

காத்தான்குடியில் சிறப்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

(பாறுக் ஷிஹான்)

உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை இன்றைய தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.


அதன் ஒரு பகுதியாக, காத்தான்குடி பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் கடற்கரை திடலில் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.


சர்வதேச பிறைக்குழுவின் காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த திடல் தொழுகையில், பெருமளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக பங்கேற்று ஒன்றுபட்ட சமுதாய உணர்வுடன் தொழுகையை நிறைவேற்றினர்.


பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் மௌலவி எம்.என். முஹம்மத் (ஷரயி) நடத்தி வைத்தார். அவர் தனது உரையில் ஒற்றுமை, அமைதி மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


இந்நிகழ்வு அமைதியான சூழலில் சிறப்பாக நடைபெற்றதுடன், மக்களின் உற்சாகமான பங்கேற்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال