JobVibe.lk - Sri Lanka Job Portal

சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் காலித் பின் அல்கஹ்தானி அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...)


ஈதுல் பித்ர் (நோன்புப் பெருநாள்) திருநாளை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பெருநாளை அனைவருக்கும் நலம், வளம் மற்றும் அருட்கொடைகள் நிறைந்ததாக மீண்டும் மீண்டும் வழங்கி அருள வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.


இந்த புனிதமான தருணத்தில், இரு புனிதஸ்தலங்களின் காவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் ஸஊத் அவர்களுக்கும், பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் ஸஊத் அவர்களுக்கும், சவுதி அரேபிய மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கம் மற்றும் மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன், இலங்கை தொடர்ந்தும் முன்னேற்றமும் செழிப்பும் அடையவும், உலகம் முழுவதும் பாதுகாப்பும், ஸ்திரத்தன்மையும், அமைதியும் நிலவ வேண்டுமெனவும் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.


எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரதும் நற்செயல்களை அங்கீகரிக்க வேண்டுமெனவும், இந்த பெருநாளை மக்களிடையே சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகிய விழுமியங்களை வலுப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக மாற்றியருள வேண்டுமெனவும் பிரார்த்திக்கிறேன்.


இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இரு புனித ஹரம்களின் காவலரின் (சவுதி அரேபியாவின்) இலங்கைக்கான தூதுவர்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال