JobVibe.lk - Sri Lanka Job Portal

கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (08) சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் விமர்சையாக இடம்பெற்றது 


எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் அரங்கில் "ஈழமும் பெண் ஆளுமைகளும்" எனும் தலைப்பில் ஆய்வுகள் முன்வைக்கப்பட்டன. 


இவான்ஜலின் முத்தம்மா தில்லையம்பலம் பற்றிய ஆய்வை மொழிபெயர்ப்பாளர் அம்பிகை திவகலாலா நோமன் அவர்களும், சிவபாக்கியம் குமாரவேல் பற்றிய ஆய்வை கவிஞர் லுணுகலை ஸ்ரீ அவர்களும் இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் ஆசிரியை, அதிபர், கல்வியதிகாரி, சமூக செயற்பாட்டாளர் திருமதி.பாத்துமுத்து ஹலால்தீன் அவர்கள் பற்றிய ஆய்வை றக்ஸனா சரிபுதீன் அவர்களும் சமர்ப்பித்தனர்


எழுத்தாளர் வசந்தி தயாபரன் அவர்கள் ஆய்வரங்குக்கு செம்மையாகத் தலைமைதாங்கி, காத்திரமான கருத்துக்களையும் முன்வைத்துச் சிறப்பூட்டியமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال