குருக்கள்மடம் மனித புதைகுழி: நீதிபதி தலைமையில் விசேட கள ஆய்வு
பாறுக் ஷிஹான்
மட்டக்களப்பு குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆராய்ந்தார்
இன்று(17) குருக்கள்மடம் மனித புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்தினை நீதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் விசேட கள விஜயம் மேற்கொண்டு ஆராய்ந்துள்ளனர்.
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்து கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கி பயணித்த முஸ்லிம் பயணிகள் விடுதலைப்புலிகளினால் இடை மறிக்கப்பட்டு குருக்கள்மடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று (17) முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கின் ஒரு பகுதியாக, களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி ரி. பிரதீபன் தலைமையில், பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் குருக்கள் மடத்தில் உள்ள மனித புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்தை நேரில் பார்வையிட்டனர்.
சம்பந்தப்பட்ட இடம் தற்போது பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த மனித புதைகுழி தொடர்பான முதல் கட்ட அகழ்வாய்வு பணிகள் எதிர்வரும் மார்ச் 30ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்தார்.நீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெறவுள்ள அகழ்வாய்வை முன்னிட்டு இந்த விசேட கள விஜயம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது..


















No comments