JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கனமூலைக்கு விஜயம் செய்த இந்திய தூதுவராலய உயர்ஸ்தானிகர்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

ஹூதா லங்கா (Hudha Lanka) நிறுவனத்தின் அழைப்பின் பேரில் செவ்வாய்க்கிழமை (17) புத்தளம் கனமூலை பிரதேசத்திற்கு இந்திய தூதுவராலய உயர் ஸ்தானிகர் எச்.ஈ சந்தோஷ் ஜா விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.


இதன் போது சுமார் 150 வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.


அத்தோடு கனமூலை பாடசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன்  தேவையான பௌதீக வளங்கள் தொடர்பான மகஜர் ஒன்றம்  பாடசாலை அதிபர் பீ.எம் முஸ்னியினால் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் மற்றும் ஊர் பிரமுகர்கள்  நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال