JobVibe.lk - Sri Lanka Job Portal

கனமூலை பத்தாம் கட்டை வீதி புனரமைப்பு...!.

 (எம். எச். எம். சியாஜ்)

கனமூலை பத்தாம் கட்டை வீதியில் நோன்பு பெருநாள் தொழுகை இடம் பெற்ற அல்ஹாஜ் சேகு அலாவுதீன் விளையாட்டு மைதானம் கடந்த வெள்ளிக்கிழமை (20)  புனரமைக்கப்பட்டது


மதுரங்குளி வர்த்தக சங்கத்தின் தலைவரும், மதுரங்குளி ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவருமான எம். எஸ். டி. அமான் மற்றும் மதுரங்குளி ஏற்றுமதியாளர் சங்கத்தின் உப செயலாளர் எஸ். ஏ. அஸ்ரின் ஆகியோரிடம் கனமூலை ஜும்ஆ மஸ்ஜித் முன்னாள் தலைவர் அஷ்ஷெய்க் எச். எச். எம். நஜீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்பாதை பொறல் இடப்பட்டு புனரமைக்கப்பட்டது


அத்தோடு சேகு அலாவுதீன் மைதானதானத்திற்கு முன்னால் வாகனத் தறிப்பிடமும் செப்பனிடப்பட்டு புனரமைக்கப்பட்டது


இந்நிகழ்வில் கனமூலை ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் என். எம். ஏ. பஸீர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர் கள், தாருஸ்ஸலாம் நலன் புரிச்ஸசங்கத் தலைவர் ஏ. டி. எம். முஸம்மில், எச். எச். பைஸல், தொழிலதிபர் எஸ். ஏ. எம். அஸ்ரின் (Green Export உரிமையாளர்), பீ. கே. பரீட், எம். எஸ். எம். அஸ்வர் ஆகியோர் இப்புனரமைப்பு பணியில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது..




















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال