JobVibe.lk - Sri Lanka Job Portal

தில்லையடி மஸ்ஜித் சம்மேளனம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் வழிகாட்டுதலின் கீழ், தில்லையடி பகுதியில் அமைந்துள்ள 22 மஸ்ஜித்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை வலுப்படுத்தும் உயர் நோக்கில், புத்தளம் தில்லையடி மஸ்ஜித் சம்மேளனம் ஞாயிற்றுக்கிழமை (08) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது


சம்மேளனத்தின் பிரதான குறிக்கோள்கள்

மஸ்ஜித்களுக்கிடையேயான ஒற்றுமையை உறுதிப்படுத்துதல்

தொழுகை நேரங்களை ஒழுங்குபடுத்தி ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துதல்

மார்க்க நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்

சமூக நலத்திட்டங்களை திட்டமிட்ட முறையில் முன்னெடுத்துச் செல்லுதல் எனவும் தெரிவிக்கப்பட்டது 


இந்நிகழ்வில் சமூகத்தின் உலமாக்கள் மற்றும் 22 மஸ்ஜித்களின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் சம்மேளத்திற்கான நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.


தலைவர் – சகோதரர் பைருஸ்

செயலாளர் – சகோதரர் அஜ்மல்

பொருளாளர் – சகோதரர் ருமைஸ்


இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் மிஸ்பாஹி, செயலாளர் அஷ்ஷேக் அஸீம் ரஹ்மானி, உப செயலாளர் அஷ்ஷேக் இமாம்தீன் அஷ்ரபி, உறுப்பினர்களான அஷ்ஷேக் ரகீப் ரஷாதி, அஷ்ஷேக் ஹஸ்பான் ஸாபிதி மற்றும் ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷேக் அப்துல்லாஹ் ரஷாதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


மேலும், சம்மேளனத்தின் நோக்கங்கள், பணித்திட்டங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றதுடன் இச்சம்மேளனம் சமுதாய ஒற்றுமையை பலப்படுத்தி மார்க்க மற்றும் சமூகப் பணிகளை முன்னெடுக்க வலுவான ஒருங்கிணைப்புத் தளமாக அமையும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال