JobVibe.lk - Sri Lanka Job Portal

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் கூட்டம் மற்றும் மாநாட்டு மண்டபம் காரியாலயம் திறந்து வைப்பு.

எம்.யூ.எம்.சனூன்

கொழும்பு மவுண்ட் லவினியா பகுதியில் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி, தனது புதிய கூட்டம் மற்றும் மாநாட்டு மண்டப காரியாலய தொகுதியை சமூக நலப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தது.


இந்த திறப்பு விழா, ஒரு கட்டடத்தின் தொடக்கமாக மட்டும் இல்லாமல், மனித உரிமைகள் பாதுகாப்பிற்கான புதிய அத்தியாயமாகவும் அமைந்தது.


அமைப்பின் தவிசாளர் டாக்டர் எம்.ஏ.சீ.மஹ்சூம் தலைமையில், தலைவர் ஏ.ஆர். அமீர்கானின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம் பெற்றது. 


நாடளாவிய ரீதியில் இங்கு வருகை தந்திருந்த பணிப்பாளர்களுடன் விரிவான கலந்துரையாடல் ஒன்றும் இதன்போது இடம்பெற்றது.

 

இதில் மனித உரிமை பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான முக்கிய கருத்துக்கள் பரிமாறப்பட்டன.


அதனைத் தொடர்ந்து, ஆன்மீக மற்றும் சமூக ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதன் போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை சிறப்பு அதிரடிப் படை வீரர்களுக்கும் இப்தார் உணவுகள் வழங்கப்பட்டன.


மேலும், மனிதாபிமான சமூக நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக 30 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.


இந்த நிகழ்வுக்காக சர்வதேச ரீதியில் இருக்கும் பலர் தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். 


இந்த நிகழ்வை சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் ஊடக பணிப்பாளர் ஊடகவியலாளர் பஸ்லான் ஒளிப்பதிவு செய்திருந்தார்.


இது ஒரு அலுவலக திறப்பு விழா மட்டுமல்ல, மனித நேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு இணைந்த புதிய பயணத்தின் அர்த்தமுள்ள தொடக்கமாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال