JobVibe.lk - Sri Lanka Job Portal

போர்: குறுந்தூரம் ஓடிய அமெரிக்காவை மரதன் ஓட்டத்திற்குள் இழுத்த ஈரான். ட்ரம்ப்பின் உடல் மொழியும், ஈரானின் புவியியலும், கள நிலவரமும்.

தற்போது நடைபெறுகின்ற போரானது, குறுந்தூர ஓட்டத்தில் அமெரிக்காவும், மரதன் ஓட்டத்தில் ஈரானும் உள்ளது போன்று தெரிகிறது. குறுந்தூரத்தில் வேகமாக ஓடிவிட்டு களைத்துவிடுவர், அதேநேரம் நீண்ட தூரம் ஓடுபவர் இலக்கை அடையும் வரைக்கும் வேகத்தைக் கட்டுப்படுத்தி ஓடிக்கொண்டே இருப்பார். 


நான்கு நாட்கள் திட்டத்துடனேயே தாக்குதலை ஆரம்பித்தனர். ஆனால் ஈரானின் பதில் நடவடிக்கையானது, குறுந்தூரம் ஓடியவர்களை மரதன் ஓட்டத்தில் இணைத்துள்ளது. 


ஈரானின் ட்ரோன், ஏவுகணை மற்றும் ஆயுத சேமிப்பு கிடங்குகள் அனைத்தும் ஆழமான நிலத்துக்கடியில் உள்ளது. ஆனால் அவ்வாறான ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.   


மக்கள் குடியிருக்கும் நகர் பகுதிகள், வீடுகள், சிறுவர் பாடசாலைகள், வைத்தியசாலைகள், விளையாட்டு மைதானம், தெஹ்ரான் பல்கலைக்கழகம் போன்ற சிவில் சார்ந்த இடங்களில் இதுவரையில் ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசியுள்ளதுடன், பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  


ஈரான் இலங்கையை விட 24 மடங்கு பெரிய நிலப்பரப்பினைக் கொண்ட மலைப்பகுதி அதிகமுள்ள நாடு. அதில் மத்திய ஈரான் பகுதிகளில் ஏராமான இராணுவ நிலைகள் உள்ளதாகவும், இதுவரையில் அமெரிக்க, இஸ்ரேலிய விமானங்கள் அப்பகுதிக்குள் நுழையவில்லையென்றும் கூறப்படுகின்றது. 


நாற்பது சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பைக்கொண்ட காசாவில் இரண்டு வருடங்களாக பொது மக்கள் மீது குண்டுகளை வீசி கொலை செய்தும், அவர்களது இலக்கினை அடைய முடியவில்லை. 


அப்படியிருந்தும் பாரிய நிலப்பரப்பினைக் கொண்ட ஈரானின் நகரங்கள் மீது தொடர் குண்டுகளை வீசி கட்டிடங்களை உடைத்து, பொது மக்களை கொலை செய்யலாமே தவிர, இராணுவ நிலைகளை அழித்து இலக்கை அடைய முடியாது. 


ஈரானிய கடற்படை தளம், ஏவுகணை தளம், ஆயுத விநியோகம் ஆகியவற்றை அழித்துவிட்டோம், தளபதிகளை கொன்றுவிட்டோம் என்றெல்லாம் அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கையில், நாளாந்தம் ஈரான் புதிய புதிய ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் ஏவி அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நிலைகளை அழித்து சாகசம் கான்பிப்பதனை காணக்கூடியதாக உள்ளது. 


எனவே இந்த போர் நீண்டுகொண்டு செல்லும் பட்சத்தில், கள நிலவரமானது ஈரானுக்கு சாதகமான நிலை அதிகரிப்பதுடன், என்னதான் அறிக்கைகளை வெளியிட்டாலும் தோல்விப் பயம் டொனால்ட் ட்ரம்ப்பின் உடல் மொழியில் தெரிகிறது.   


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال