புத்தளம் நகரில் அமைக்கப்பட உள்ள நூதன சாலை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வதற்காக புத்தளம் ஜம்இய்யத்துல் உலமா கிளையினர் காத்தான்குடி நூதன சாலைக்கு விஜயம்.
எம்.யூ.எம்.சனூன்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் புதிய கட்டடம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதற்கான ஆய்வு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஜம்இய்யாவின் கட்டடத்திற்குள் ஒரு சிறந்த மற்றும் பயனுள்ள நூதனசாலை அமைப்பை உருவாக்கும் நோக்கில், புத்தளம் நகரக்கிளையின் உறுப்பினர்கள் அனைவரும் காத்தான்குடி நூதன சாலையை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்த பயணத்தின் போது, காத்தான்குடி நகரசபையின் நகரபிதா எஸ்.எம். அஸ்வர் மற்றும் அதிகாரிகள், அந்த நுதனசாலையின் அமைப்பு, அதன் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.
மேலும், இந்நிகழ்வின் நினைவாக, ஜம்இய்யாவினால் நகரபிதாவிற்கு நன்றி கடிதமும் வழங்கப்பட்டது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், இத்திட்டத்திற்கு தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவருக்கும் ஜம்இய்யா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
இந்த அனுபவத்தின் அடிப்படையில், ஜம்இய்யாவின் புதிய கட்டடத்தில், குறிப்பாக காரியாலயத்துடன் இணைந்த ஒரு நவீன நூதன சாலையை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.











No comments