Breaking News

மன்னார் வங்காலை கடற்பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோத சுழியோடி கடல் அட்டைகளைப் பிடித்த 4 சந்தேக நபர்கள் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினர், மன்னாரின் வங்காலை கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை (27) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது,  ​​சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களையும், முந்நூற்று நாற்பத்தொன்பது (349) கடல் அட்டைகளுடன், சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.  


அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பலான புஸ்ஸதேவவினால் மன்னார் வங்காலை பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த நான்கு (04) நபர்கள், முந்நூற்று நாற்பத்தொன்பது (349) கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.   


இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்ப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்கள் 26 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். சந்தேக நபர்கள், கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





No comments