JobVibe.lk - Sri Lanka Job Portal

ஈரானைவிட அரபு நாடுகளின் பாதுகாப்புக்கு பாரிய நிதி. இராணுவம் இருக்கின்ற நிலையில், அமெரிக்க படைகள் எதற்கு ?

வளைகுடா நாடுகள் வருடந்தோறும் பெருமளவான ஆயுதங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கிக் குவிப்பதன் மூலம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதுகாத்து வருகிறது. 


அதேநேரம், இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலான ஆயுதங்களை இஸ்லாமிய நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்வதில்லை.  


வருடாந்த பாதுகாப்பு செலவுக்காக சவூதி அரேபியா $78 பில்லியனும், எமிரேட்ஸ் $21 பில்லியனும், கத்தாரும், ஈரானும் தலா $15 பில்லியனும் ஒதுக்கின்றது. 


மிகப்பெரிய நிலப்பரப்பினையும், சனத்தொகையினையும் கொண்ட ஈரானின் பாதுகாப்புச் செலவுக்கு சமனான தொகையை மிகச் சிறிய நாடான கத்தார் ஒதுக்குகின்றது. அதேநேரம் சவூதி அரேபியா, எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு செலவுகள் ஈரானைவிட மிக அதிகம். 


அயல் நாடுகளில் மில்லியன் கணக்கான இஸ்லாமியர்கள் வறுமையில் வாடுகின்ற நிலையில், இவ்வளவு பெரிய தொகைகளை பாதுகாப்பு செலவுக்காக வருடம்தோறும் ஒதுக்குவதன் நோக்கம் என்ன ? 


வளைகுடா நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்கள் யார் ? 


இந்நாடுகளின் பாதுகாப்புப் படைகள் இருக்கின்ற நிலையில், அமெரிக்க படைகள் எதற்கு ?


விடயம் இதுதான், இந்நாடுகளில் வாரிசு அடிப்படையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே பரம்பரையாக ஆட்சி செய்து வருகின்றனர். 


இவ்வாறான குடும்ப ஆட்சிக்கு எதிராக என்றோ ஒரு நாள் மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படலாம் அல்லது இரானுவ புரட்சி ஏற்படலாம் என்ற அச்சம் ஆட்சியாளர்களிடம் உள்ளது.


இந்த அச்சம் காரணமாகவே மக்கள் மத்தியிலிருந்து எழுச்சி ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவதற்காக சொந்த இரானுவத்தினர்களும், 


இராணுவ புரட்சி ஏற்பட்டால், அதனை அடக்குவதற்காக அமெரிக்க படைகளும் நிறுத்தப்பட்டுள்ளார்களே தவிர, அயல் நாடுகளிலிருந்து எந்தவித அச்சுறுத்தல்களும் வளைகுடா நாடுகளுக்கு இல்லை. 


இந்த குடும்பங்களின் ஆட்சி அதிகாரத்திற்காகவே முஸ்லிம் நாடுகளில் அமைதியற்ற நிலை காணப்படுகிறது.


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال