JobVibe.lk - Sri Lanka Job Portal

மதுரங்குளி விருதோடை எள்ளுச்சேனையில் சிறப்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை இன்றைய தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.


அந்தவகையில் புத்தளம் - மதுரங்குளி விருதோடை எள்ளுச்சேனையில்  இன்று (20) வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில்  பெருநாள் தொழுகை  வெள்ளைப் புறா மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.


விருதோடை எள்ளுச்சேனை அந்நூர் ஜும்ஆ மஸ்ஜித் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த திடல் தொழுகையில்,  ஆண்கள் மற்றும் பெண்கள்  பங்கேற்று ஒன்றுபட்டு சமுதாய உணர்வுடன் தொழுகையை நிறைவேற்றினர்.


பெருநாள் தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் அஷஷெய்க்:-  சிஹாப்தீன் (ரஹ்மானி) நடத்தி வைத்தார். அவர் தனது உரையில் ஒற்றுமை, அமைதி மற்றும் மனிதநேயம்,கணவன், மனைவி புரிந்துணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


இந்நிகழ்வு அமைதியான சூழலில் சிறப்பாக நடைபெற்றதுடன், மக்களின் உற்சாகமான பங்கேற்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال