JobVibe.lk - Sri Lanka Job Portal

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர்கள் கொழும்பிலுள்ள ஈரானிய தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு விஜயம்.

எம்.யூ.எம்.சனூன்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் பலியான ஈரானின் அதி உயர் தலைவர் அலி காமனெயி அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர்கள் (09) கொழும்பிலுள்ள ஈரானிய தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு விஜயம் மேற்கொண்டனர்.


இந்த விஜயத்தின் போது, அதி உயர் தலைவர் அலி காமனெயி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் அனுதாபச் செய்தி தூதரக அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் மிஸ்பாஹி, செயலாளர் அஷ்ஷேக் அஸீம் ரஹ்மானீ, உப செயலாளர் அஷ்ஷேக் இமாம்தீன் அஷ்ரபி, உறுப்பினர்களான அஷ்ஷேக் ஸல்மான் இஹ்ஸானி, அஷ்ஷேக் ரகீப் ரஷாதீ, அஷ்ஷேக் ஹஸ்பான் ஸாபிதீ மற்றும் ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷேக் அப்துல்லாஹ் ரஷாதீ ஆகியோரும் கலந்து கொண்டனர்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال