JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே. எம். எம். பைஸர் மரிக்கார் விடுத்திருக்கும் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இறைவனின் கட்டளைக்கமைய இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான நோன்புகள் முழுவதும் நோற்று புனித ரமழான் மாதம் முழுவதும் வணக்க வழிபாடுகள் புரிந்து விட்டு இன்று மகிழ்ச்யோடு பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைத்து உடன்பிறப்புகளுக்கும் எனது ஈதுல் பித்ர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


அன்பு, மன்னிப்பு, பொறுமை, மனிதாபிமான செயல்கள் மூலமும் ஆத்ம பரிசோதனை மூலமும் எமது ஆத்மாவையும் உடலையும் தூய்மைப்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை புனித நோன்பு எமக்கு வழங்கியது.  


ரமழானிலே கடமையான தொழுகைகள், குர்ஆன் ஓதுதல், இஃதிகாப் இருத்தல் மற்றும் இதர சுன்னத்தான அமல்கள் மூலம் பள்ளிவாசல்கள் நிரம்பிக் காணப்பட்டன. இரவு பகலாக நல்லுபதேசங்கள் கேட்கக் கிடைத்த வண்ணம் இருந்தன. இவ்வாறெல்லாம் நல்ல பல விடயங்களைப் பெற்றுக் கொண்டு நல்லமல்களில் ஈடுபட்ட நாம் அதன் பக்குவத்திலும் பயிற்சியிலும் எமது வாழ்க்கையை தொடர்ந்து அமைத்துக் கொள்வதே ரமழானில் நாம் அடைந்த பயனாகும்.


அதேபோன்று, எமது நாட்டில் இன நல்லிணக்கம் சமத்துவம் நிலைபெறுவதற்கும் இன, மத வேறுபாடுகளுக்கப்பால் அனைவரும் ஒற்றுமையாகவும் சந்தோசமாக வாழ்வதற்கும், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் விரைவில் அமைதியாகி, உலகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனை இந்நாளில் இருகரமேந்தி பிரார்த்திப்போமாக. 

ஆமீன்


"ஈத் முபாரக்"

கே. எம். எம். பைஸர் மரிக்கார்

கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال