JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தில் சிறுவர்களை கடத்துவதற்கு முயற்சி அச்சத்தில் பொது மக்கள்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புத்தளம் அல்-ஹசனாத் வீதியில் சிறுவர்களை கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டமை தொடர்பான  சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (10) பதிவு செய்யப்பட்டுள்ளது. 


குறித்த தினம் புத்தளம் ஹசனத் பள்ளி வீதியில் எட்டாவது ஒழுங்கையில் அல் ஹசனாத பள்ளிவாசலிருந்து காலை  நேர குர்ஆன் மதுரஸாவில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் முகக் கவசம் அணிந்திருந்த மர்ம நபர்கள் நால்வரால் துறத்தப் பட்டதாகவும் சிறுவர்கள் ஓடித் தப்பிவிட்டதாகவும். பாதை ஓரமாக ஒரு வெள்ளை நிற வாகனம் நிறுத்தப்பட்டு இருந்ததாகவும் ஓடித் தப்பிய குறித்த சிறுவர்கள் குறிப்பிட்டதாகவும் 


மேலும் இவ்வாறானதொரு சிறுவர்களை கடத்தும் முயற்சி கடந்த வாரமும்  காலை வேலையில்  இந்த அல்- ஹசனாத் வீதியில் இடம்பெற்றுள்ளலாகதாவும் அல் ஹஸனாத் பள்ளிவாசலின் பேஷ் இமாம் நடந்த சம்பவம் உண்மை என்ற  விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். 


மேற்படி விடயம் தொடர்பில் புத்தளம் மாநகர மேயர் ,புத்தளம் நகர பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் பொலிஸாரின்  கவனத்திற்கு பெற்றோர்களால் முன்வைக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال