JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளத்தில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் ஏற்பாட்டில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் மாபெரும் கைத்தொழில் கண்காட்சியும், மலிவு விற்பனையும் எதிர்வரும் 2026 ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் 28ம் திகதிகளில் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.


 முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.ஜீவைரியா தலைமையில் வெள்ளிக்கிழமை (27) காலை 09 மணியளவில் இடம்பெறவுள்ள ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் , விஷேட அதிதியாக புத்தளம் மாவட்ட செயளாளர் வை.ஐ.எம்.சில்வா, மற்றும்  கௌரவ அதிதியாக புத்தளம் மாவட்டத்தின் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் துணைப் பணிப்பாளர் எஸ்.எல்.குடா விடாநயக ஆகியோர்  கலந்து சிறப்பிக்கவுள்ளனர்


முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் கைத்தொழில் பயிற்சி வழங்கப்பட்ட பெண்கள் பாரம்பரிய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள், சவர்க்கார வகைகள், அலங்காரப் பொருட்கள், ஆடைகள், மூலிகை செடிகள், பூ மரங்கள் மற்றும் பெண்களுடைய பல்வேறு உற்பத்தி பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுவதுடன் அதன் விற்பனையும் இடம்பெறும் அத்தோடு கைத்தொலைப்பேசி பழுது பார்த்தல் பயிற்சியை நிறைவு செய்த பெண்களின் கைத்தொலைபேசி பழுதுபார்த்தல் சேவையும் இடம்பெறவுள்ளது.


.பெண்களின் உற்பத்தி பொருட்களைக் கொள்வனவு செய்வதன் மூலம் அவர்களது பொருளாதார முன்னேற்றத்தில் பங்குகொள்வதற்காக இந்த இரண்டு நாள் கண்காட்சி மற்றும் விற்பனை கூடத்திற்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال