புத்தளம் தாருல் குர்ஆன் அல் கரீம் அரபுக் கல்லூரி நடாத்தும் மாபெரும் கிராஅத் போட்டி.
எம்.யூ.எம்.சனூன்
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு புத்தளம் தாருல் குர்ஆன் அல் கரீம் அரபுக் கல்லூரி மாபெரும் கிராஅத் போட்டியொன்றினை நடாத்தவுள்ளது.
போட்டிகளில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக 50,000 ரூபாவும்,
இரண்டாம் பரிசாக 25,000 ரூபாவும், மூன்றாம் பரிசாக 10,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
மேலும் ஐந்து ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
போட்டிகள் யாவும் கல்லூரி மண்டபத்தில் இம்மாதம் 11ம் திகதி புதன்கிழமை காலை 9 மணியிலிருந்து இடம்பெறவுள்ளது.
போட்டியாளர்கள் ஓத வேண்டிய சூராக்கள், அத் தக்வீர், அல் இன்பிதார், அஷ் ஷம்ஸ், அழ் ழுஹா, ஆமனர் ரசூல்,
நிபந்தனைகள், காரிமார்கள் ஓதுவது போன்று ஓதுதல் வேண்டும்.
ஆண்பிள்ளைகள் மாத்திரம் (12 வயது முதல் 18 வயது வரை) பங்குபற்ற முடியும்.
போட்டியாளர்கள் புத்தளம் நகர் மற்றும் கரிக்கட்டை முதல் கரைத்தீவு எல்லைக்குட்பட்ட வதிவிடத்தை கொண்டிருத்தல் வேண்டும்.
நடுவர்களின் முடிவே இறுதி முடிவாகும்.
பதிவு செய்து பங்குபற்ற விரும்புவோர் இம்மாதம் 08ஆம் திகதிக்கு முன்னதாக கீழ்க்கண்ட விபரங்களை அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்.
முழுப் பெயர், வயது, தொலைபேசி இலக்கம் ,வாட்ஸ்அப் இலக்கம் முகவரி என்பன.
மேலதிக விபரங்களுக்கு அதிபர்
அஷ் ஷைய்க் அல் உஸ்தாத் எம்.இஸட்.எம்.சௌக்கி பஹ்ஜி அவர்களோடு 076 977 6407 எனும் இலக்கத்தோடு தொடர்பு கொள்ளலாம்.

No comments