JobVibe.lk - Sri Lanka Job Portal

அரபு நாடுகளில் உள்ள சிவில் கட்டிடங்களை ஈரான் தாக்குவது ஏன் ?

ஈரான் மீதான தாக்குதலானது அமெரிக்காவும், இஸ்ரேலும் மாத்திரம் திட்டமிட்ட தாக்குதல் அல்ல. இந்த தாக்குதலுக்கு அரபு நாடுகளின் மறைமுக ஒத்துழைப்பு பிரதானமானது. 


ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரேன், குவைத், கட்டார், ஜோர்டான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், சில நாடுகளின் சிவில் கட்டிடங்களும் தாக்கப்பட்டது.  


அத்துடன், ஈரான் மீதான தாக்குதலை வழிநடத்துவதற்கும், கண்காநிப்பதற்குமாக எமிரேட்ஸ், பஹ்ரேன், குவைத் ஆகிய நாடுகளின் அரச அனுசரணையுடன் அங்குள்ள ஹோட்டல்கள் மற்றும் வேறு கட்டிடங்களில் அமெரிக்காவின் CIA, இஸ்ரேலின் மொசாட் அதிகாரிகள் தங்கியிருந்தனர்.  


மேலும், அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் தாக்குதலுக்கு உள்ளானதால், அந்த தளங்களில் இருந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த கட்டிடங்களில் தங்கவைக்கப்பட்டனர். 


இவ்வாறான கட்டிடங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதுடன், மேலதிகமாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தனிப்பட்ட வர்த்தக நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. 


எனவே வெளிப்பார்வையில் தாக்குதலுக்கு உள்ளானவைகள் சிவில் கட்டிடங்களாக தெரிந்தாலும், அவைகள் அனைத்தும் இராணுவ நிலைகள் என்பதுதான் யதார்த்தமாகும்.  


முகம்மத் இக்பால்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال