JobVibe.lk - Sri Lanka Job Portal

தைபா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்ப்பதற்கான பரீட்சை.!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான எழுத்துப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை என்பன எதிர்வரும் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணி தொடக்கம் சாய்ந்தமருது, பொலிவேரியனில் அமைந்துள்ள கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.


ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சை எழுதிய, அல்-குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த, ஆர்வமுள்ள மாணவிகள் இப்பரீட்சைகளில் பங்குபற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருகின்ற சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் மௌலவியா பட்டத்திற்கான அல்ஆலிம் இஸ்லாமிய கற்கை நெறியுடன் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கும் மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதுவரை சுமார் 50 மாணவிகள் இக்கல்லூரியில் இருந்து மௌலவியா பட்டம் பெற்றுள்ளனர். இவர்களுள் பல மாணவிகள் பல்கலைக்கழக அனுமதி பெற்று, உயர் கல்வி கற்று வருவதுடன் கற்கைகளை பூர்த்தி செய்த சில மாணவிகள் பல்கலைப் பட்டம் பெற்று வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال