JobVibe.lk - Sri Lanka Job Portal

மாரவில கடல் பகுதியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 953 கிலோ பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படை

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

மாரவில கடல் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (03) இலங்கை கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​நாட்டிற்கு கடத்தப்பட்ட சுமார் தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்று (953) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினர் கைப்பற்றினர்.


மாரவில கடல் பகுதியில் மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை விரைவு தாக்குதல் படகினால் நடத்திய இந்த சிறப்பு தேடல் நடவடிக்கையின் போது, ​​குறித்த கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த இருபத்தேழு (27) சந்தேகத்திற்கிடமான பைகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் அங்கு, சட்டவிரோதமாக கடத்த முயற்சித்து கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்று (953) பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.


மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் உள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال