புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் 2026ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரப்படுகிறது.
எம்.யூ.எம்.சனூன்
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக (36 வருடங்கள்) இஸ்லாமிய கல்வி பணியை முன்னெடுத்து வரும் இலங்கையின் முன்னனி இஸ்லாமிய கல்வி நிறுவனமான புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் 2026ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரப்படுகிறது.
க.பொ.த. உயர் தரம், இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழிக்கான 5 வருட இஸ்லாமிய ஷரீஆ கற்கை நெறியானது, ஷரீஆ துறை பாடங்கள் உள்ளடங்கிய இஸ்லாமிய கற்கைகள், அரபு, ஆங்கிலம், சிங்களம் உள்ளடங்களாக மொழியியல் பாடங்கள், க.பொ.த. உயர் தர கலைப் பிரிவு, Pre-School Training , Al Quraan Madrasa Training, Research Methodology மற்றும் TVEC அங்கீகாரம் பெற்ற NVQ – 3 தகவல் தொழில்நுட்ப கற்கைநெறி (ICT) ஆகியன உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கற்கை நெறிக்கான அனுமதித் தகைமைகள் :
2008.01.31 ஆம் திகதிக்குப் பின் பிறந்தவராக இருத்தல்,
க.பொ.த. சாதாரண தரம் தோற்றியவராக இருத்தல்,
அரபு மொழி, இஸ்லாமிய கற்கைளில் ஆர்வமுள்ளவராக இருத்தல்,
அல் குர்ஆனை பார்த்து சரளமாக ஓதக்கூடியவராக இருத்தல்,
தேக ஆரோக்கியம் உடையவராக இருத்தல்.
நேர்முகப் பரீட்சை தொடர்பான மேலதிக விபரங்களை பெற 0764066668 / 0771799774 என்ற WhatsApp இலக்கங்களில் ஒன்றிற்கு பெயர் மற்றும் முகவரி என்பவற்றை அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

No comments