JobVibe.lk - Sri Lanka Job Portal

திருகோணமலை, உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 18 டிங்கி படகுகளுடன் 02 சந்தேக நபர்கள் கைது செய்த கடற்படை

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

திருகோணமலை, உப்பாறு, மகாவலி கங்கையை அன்மித்த பகுதியில் வெள்ளிக்கிழமை  (06) இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​மகாவலி கங்கையின் உப்பாறு பாலத்திற்கு அருகில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற பதினெட்டு (18) டிங்கி படகுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.


அதன்படி, மகாவலி கங்கையின் உப்பாறு பாலத்திற்கு அருகிலுள்ள பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கோகண்ண நிறுவனம் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான பதினெட்டு (18) டிங்கி படகுகள் சோதனை செய்யப்பட்டன. அங்கு, ​​மகாவலி கங்கையின் உப்பாறு பாலத்திற்கு அருகிலுள்ள பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற பதினெட்டு (18) டிங்கி படகுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. 


மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 43 மற்றும் 46 வயதுடைய திருகோணமலை, கிண்ணியாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமாக ஏற்றிச் சென்ற மணல், டிங்கி படகு மற்றும் பிற பொருட்களை சட்ட நடவடிக்கைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال