JobVibe.lk - Sri Lanka Job Portal

ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘SADH’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘SADH’ செவ்வாய்க்கிழமை (10) விநியோக மற்றும் சேவை விஜயத்திற்காக இலங்கையை வந்தடைந்ததுடன், மேலும் இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினர் மரபுகளுக்கு ஏற்ப கப்பலை வரவேற்றது.  


அதன்படி, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 75 மீட்டர் நீளமுள்ள 'RNOV SADH' என்ற போர்க்கப்பலுக்கு, லெப்டினன்ட் கமாண்டர் Shaheen Saud Abdul Rahman AI Balushi தலைமை தாங்குகிறார்.


மேலும், போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், ​​அதன் அங்கத்துவ குழுவினர்கள் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளனர்.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال