JobVibe.lk - Sri Lanka Job Portal

மாரவில கடற்பரப்பில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 300 கிலோ பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படை

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

மாரவில கடல் பகுதியில் இலங்கை கடற்படை சனிக்கிழமை (07) நடாத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட முன்னூறு (300) கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடையுடன்) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.


அதன்படி, மாரவில கடல் பகுதியில் மேற்கு கடற்படை கட்டளையின் P484 கப்பல் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த பத்து (10) சந்தேகத்திற்கிடமான பைகள் பரிசோதிக்கப்பட்டன. அங்கு, சட்டவிரோதமாக அவற்றை கொண்டு வர முயற்சிக்கும் போது கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முந்நூறு (300) கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.


மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال