JobVibe.lk - Sri Lanka Job Portal

"விஷேட தேவையுடையோரின்" கைவண்ணத்தில் உருவான சுய உற்பத்தி பொருட்களுடைய கண்காட்சி மற்றும் விற்பனை.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகரின் "விஷேட தேவையுடையோரின்" கைவண்ணத்தில் உருவான சுய உற்பத்தி பொருட்களுடைய கண்காட்சி மற்றும் விற்பனை கூடம் என்பன புத்தளம் கொழும்பு முகத்திடலில் செவ்வாய்க்கிழமை (10) காலை மிக விமரிசையாக இடம்பெற்றது.


இந்த நிகழ்வுதனை புத்தளம் மாவட்ட செயலகம், புத்தளம் மாநகர சபை, இலங்கை சமாதான பேரவை, ஒடெப்ட் நிறுவனம் மற்றும் விங்ஸ் உமன் லீடர்ஸ் அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.


இந்த நிகழ்வில் விசேட தேவையுடையவர்களுடைய கை வண்ணத்தில் உருவான பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோடு அதிதிகளும், பொதுமக்களும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு காட்சி பொருட்களை கொள்வனவு செய்தனர்.


இந்நிகழ்வில் சமய தலைவர்கள்,  புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத், உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள், சர்வ மத ஒன்றியத்தினர், புத்தளம் பிரதேச செயலாளர் குமுது பி. விதானகே, மகளிர் அமைப்புகளின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.














Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال