JobVibe.lk - Sri Lanka Job Portal

ட்ரம்ப் ஏன் இஸ்ரேலை தீவிரமாக ஆதரிக்கின்றார் ? அமெரிக்க ஜனாதிபதியை இயக்குகின்ற சியோனிஸ்ட் யார் ?

ஒவ்வொரு ஆட்சியாளர்களை இயக்குவதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் ஆட்சியாளர்களுக்கு பின்னணியில் கொள்கை வகுப்பாளர்கள் இருப்பார்கள். சில நேரம் அவ்வாறான கொள்கை வகுப்பாளர்களின் மனோநிலைக்கும், விருப்புக்கும் ஏற்ப ஆட்சித் தலைவர்கள் இயக்கப்படுவதுண்டு. இவர்களை பற்றி வெளியே பேசப்படுவதில்லை. 


ஆனால் இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பின்னணியிலிருந்து இயக்குகின்ற அவரது மருமகன் ஜராட் குஷ்ணர் என்னும் பெயர் அடிக்கடி சர்வதேச அரங்கில் பேசப்பட்டுவருகிறது. 


அண்மையில் ஓமானில் நடைபெற்ற ஈரானுடனான பேச்சுவார்த்தை மட்டுமல்ல, பாலஸ்தீன் விவகாரம் குறிப்பாக மத்திய கிழக்கு சம்பந்தப்பட்ட விடயங்களில் அமெரிக்க சார்பு ராஜதந்திரியாக ஜராட் குஷ்ணரின் வகிபாகம் பிரதானமானது. 


கிறிஸ்தவர் அல்லாத ஒருவரால் அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியினை வகிக்க முடியாது. ட்ரம்ப் ஒரு கிறிஸ்தவராக இருக்கலாம் ஆனால் அவரது மருமகன் ஜராட் குஷ்ணர் ஒரு யூத சியோனிஸ்ட். 


அதாவது இதுவரை காலமும் சியோனிஸ்டுகளின் செல்வாக்கில் அமெரிக்க அரசியல் அதிகாரம் இருந்ததனாலேயே அது தொடர்ந்து இஸ்ரேலுக்கு வரம்பற்ற ஆதரவினை வழங்குகிறது.   


ஆனால் தற்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சியில் அமெரிக்க ஜனாதிபதியின் வீட்டுக்குள்ளேயே சியோனிஸ்ட் இருந்துகொண்டு அமெரிக்காவை கட்டுப்படுத்துகிறது.   


காசாவிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றும் திட்டம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன் பிரதேசங்களில் யூதக் குடியேற்றங்களை நிறுவுவதற்கான இஸ்ரேலிய இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு ஜரேல்ட் குஷ்ணரினால் பெருமளவில் நிதி வழங்கப்பட்டு வருகின்றது. 


ட்ரம்பின் முதலாவது பருவகால ஆட்சியில் உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அங்கீகரிப்பதாக ட்ரம்ப் அறிவித்ததுடன், அமெரிக்க தூதரகத்தை ஜெருசலத்திற்கு மாற்றினார். இதற்கு ட்ரம்பின் மருமகனின் அழுத்தமே காரணம் என்று அப்போது பேசப்பட்டது. 


இவர் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசரான முஹம்மட் பின் சல்மானின் மிக நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவின் குடும்ப நண்பர் என்பது மேலதிகமான தகவல். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال