JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே. எம். எம். பைஸர் மரிக்கார் பு/கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு நிதி அன்பளிப்பு

(எம். எச். எம். சியாஜ்)

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வின் போது பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க பாடசாலையின் அதிபர் காரியாலய திருத்த வேலைகளுக்காக கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் கே.எம்.எம். பைசர் மரைக்காரினால் ஒரு இலட்சம் பெறுமதியான காசோலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது இதன்போது புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என். டி. எம். தாஹிரும் பங்கேற்றிருந்தார்.


 புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஐ.என்.எம். எம். லாஹிர் தலைமையில் புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. எம். நௌஷாத் அவர்களின் வழிகாட்டலின் கீழ்  திங்கட்கிழமை (02) மேற்படி புலமை மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال