JobVibe.lk - Sri Lanka Job Portal

வட மாகாணத்தில் சாதனைபடைத்த தாராபுரம் ஜின்னா விளையாட்டு கழகத்திற்கு வரவேற்பு: ரிஷாட் பதியுதீனால் கெளரவம்

மன்னார், தாராபுரம் அல்-ஜின்னா விளையாட்டுக்கழகத்தின் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்றது.


வட மாகாண கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்டப் போட்டியில் 1990 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அல்-ஜின்னா விளையாட்டுக் கழகம் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியதையடுத்து, அந்த அணிக்கு ஊர்மக்கள் சிறப்பான வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன், அதிகளாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீப், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஜப்ரான், முன்னாள் தவிசாளர் முஜாஹீர், இணைப்பாளர் முனவ்வர், அல்-மினா மகா வித்தியாலயத்தின் அதிபர் பழீல் உள்ளிட்டோருடன் ஜின்னா விளையாட்டுக்கழகத்தின் முக்கியஸ்தர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் இதன் போது கலந்துகொண்டனர்.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال