JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ரத்மல்யாயவில் முச்சக்கர வண்டிச் சாரதியின் கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திங்கட்கிழமை (23) புத்தளம் ரத்மல்யாய பகுதியில் அமைதியான முறையில் கண்டண ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது 


 கைது செய்யப்பட்டுள்ள கொலைக் குற்றவாளி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும்  இந்த  ஈவு இரக்கம் அற்ற செயலை வண்மையாக கண்டிப்பதாகவும் அந்த நபருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.


இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال