JobVibe.lk - Sri Lanka Job Portal

இதுதான் மேற்குலகம் எங்களுக்கு போதிக்கின்ற நீதியும், ஜனநாயகமும். ஈரானின் நெஞ்சுரமும்.

வெளிநாட்டின் கூலிப்படையாக செயற்பட்டு, நாட்டுக்குள் கலவரங்களை உண்டுபண்ணி சதிமுயற்சிகளில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், இரானுவத்தினைரையும் கொலை செய்து, அரச, தனியார் சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தினர். 


இவ்வாறு சேதங்களை ஏற்படுத்திய கும்பலுக்கு எதிராக ஈரான் நாட்டின் IRGC படையினர் வன்முறையை கட்டுப்படுத்தி நாட்டை காப்பதற்காக கடும் நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக, ஈரானின் IRGC படையினரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பயங்கரவாதிகள் என்று பட்டியலிட்டு தடை செய்தனர். 


அதேநேரம் காசாவில் அப்பாவி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக் கணக்கான மனித உயிர்களை கொத்துக் கொத்தாக கொலை செய்து, ஊடகவியலாளர்களையும், களப்பணி செய்த தொண்டர்களையும் இலக்குவைத்து, வைத்தியசாலைகளை குண்டுவைத்து தகர்த்து, வாழ்விடங்களை அழித்து, மக்களை பட்டினிபோட்ட படையினர்களை இந்த மேற்குலகம் பயங்கரவாதிகள் என்று பட்டியலிடவில்லை.


அதுபோல் அமெரிக்காவிடமும், இஸ்ரேலிடமும் அணு ஆயுதம் உட்பட அனைத்து பேரழிவு தரக்கூடிய ஆயுதங்களும் வைத்திருக்கலாம். தனக்கு கட்டுப்படாதவர்களை தாக்காலாம், அழிக்கலாம், கடத்தலாம், குண்டுபோட்டு சேதப்படுத்தலாம். 


ஆனால் ஈரானிடம் அவ்வாறான ஆயுதங்கள் இருக்கக்கூடாது. நாங்கள் குண்டுபோட்டால், அதனை தடுக்கும் வல்லமை எந்த நாட்டிடமும் இருக்கக்கூடாது. 


இதுதான் மேற்குலக நாடுகள் எமக்கு கற்பிக்கின்ற ஜனநாயகமும், நீதியுமாகும். 


இவ்வாறு மேற்குலகம் போதிக்கின்ற அநீதிக்கு எதிராக இந்த உலகில் தனித்து நின்று, மார்பினை நிமிர்த்தி நெஞ்சுரத்துடன், அநீதியை எதிர்த்து போருக்கு தயாராக, ஆண்மையுள்ள ஒரேயொரு நாடாக நாங்கள் ஈரானை பார்க்கிறோம்.


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال