JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய ஆசிரியர்கள் கௌரவிப்பும் மாணவர்களுக்கான பரிசளிப்பும்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்

கற்பிட்டி அரசினர் ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் சேவையாற்றிய ஆசிரியர்கள் கௌரவிப்பும் சாதனை மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் வியாழக்கிழமை (12) பாடசாலையின் அதிபர் டபள்யூ பீ சஹிலா தலைமையில் பாடசாலையில் இடம்பெற உள்ளது.


இந்நிகழ்வின் அதிதிகளாக முன்னாள் கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளரும் தற்போதைய புத்தளம் வலய கல்விப் பணிமனையின் உதவித் திட்டப் பணிப்பாளர் என்.எம்.ஆர். தீப்தி  பெர்னான்டோ, புத்தளம் வலய கல்விப் பணிமனையின் உதவி கல்வி பணிப்பாளர் கே.எம் காந்தி லதா மற்றும் கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம். ஏ. ஜவாத் ஆகியோருடன் கத்தோலிக்க மதத் தலைவரான வணக்கத்திற்குரிய அருட் தந்தை என்டன் நிரோஷன் குருசிங்க வும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்


இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்துடன் பெற்றோர்களின் மகளீர் அணியும் இணைந்து முழுமையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال