JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் நகரில் உள்ள 52 மஸ்ஜித் நிர்வாக உறுப்பினர்களுக்கான சிறப்பு கலந்துரையாடல்.

எம்.யூ.எம்.சனூன்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில், புத்தளம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில், புத்தளம் நகரில் உள்ள 52 மஸ்ஜித் நிர்வாக உறுப்பினர்களுக்கான சிறப்பு கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.


ஜம்இய்யாவின் பிறைக்குழு பொறுப்பாளர் அஷ்ஷேக் ரகீப் ரஷாதி அவர்களின் கிராஅத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.


அதனைத் தொடர்ந்து, ஜம்இய்யாவின் செயலாளர் அஷ்ஷேக் அஸீம் ரஹ்மானி அவர்கள் மஸ்ஜித் சம்மேளனத்தின் முக்கியத்துவம் குறித்து தெளிவுபடுத்தினார்.


பின்னர், ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் மிஸ்பாஹி அவர்கள் “ரமழான் மாதத்தை எவ்வாறு பயனுள்ளதாக பயன்படுத்தலாம்?” என்ற தலைப்பில் வழிகாட்டல் வழங்கினார்.


இறுதியாக, கல்விக்குழு பொறுப்பாளர் அஷ்ஷேக் ஸல்மான் இஹ்ஸானி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.


ரமழான் வழிகாட்டல் அம்சங்கள்:


அனைத்து மஸ்ஜித்களிலும் ஹிஸ்புல் குர்ஆன் ஓதுதல்,

பங்கேற்போருக்கு ஜம்இய்யா சான்றிதழ்கள் வழங்கும்,

மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு கெளரவிப்பு செய்தல்.


அனைத்து மஸ்ஜித்களிலும் தஜ்வீத் வகுப்புகள் ஆரம்பித்தல், கலந்து கொள்ளுவோருக்கு சான்றிதழ்கள் வழங்குதல்.


அவசரமாக மஸ்ஜித் சம்மேளனம் உருவாக்குதல். (கரைத்தீவு மற்றும் இலவன்குளம் மஸ்ஜித் சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது)


இதன் போது தொழுகை நேர அட்டவணையம்  அனைத்து நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டது.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال