JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற கால் கோள் விழா

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புதிய பாடத்திட்டத்துடன் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் கால் கோள் விழா நிகழ்வு புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் அதிபர் எம். வை. ஹூதைபா தலைமையில் இனறு (29) வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பாடசாலை ஸ்தாபகரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எஸ். ஆப்தீன் எஹியா கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதியாக கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம். என். எம். றினோஸ் கலந்து கொண்டார். அத்தோடு சிறப்பு அதிதியாக பாடசாலையின் முதல் அதிபரும் ஓய்வு நிலை அதிபருமான எம். என். எம். நஜீப் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அத்தோடு பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பெரும் எண்ணிக்கையினர் கலந்து கொண்டதன் மூலம் மண்டபம் நிறைந்து இடப்பற்றாக்குறையின் காரணமாக பெற்றோர்கள் மண்டபத்திற்கு வெளியில் நின்றவண்ணம் நிகழ்வினை கண்டு கழித்தனர் இதன்மூலம் பாடசாலைக்கான கூட்ட மண்டபத்தின் தேவைப்பாடு உணரப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாக இருந்ததும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும் 


புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ள நிலையில்  வளமான நாட்டிற்குள் வளமான கல்வியை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







































Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال