JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்யாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற கால் கோள் விழா.

புதிய  பாடத்திட்டத்துடன் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை பாடசாலைக்கு அனுமதிக்கும் கால் கோள் விழா நிகழ்வு கனமூலை முஸ்லிம் மகா வித்யாலயத்தின் அதிபர் பீ. எம். முஸ்னி தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 


இந்நிகழ்வில் அதிதியாக கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே. எம். எம். பைசர் மரிக்கார் கலந்து சிறப்பித்தார். அத்தோடு தெற்கு கோட்ட கல்வி ஆசிரிய  ஆலோசகர் ராபி, பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்  எம். இஸ்வான்  உட்பட அதன் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர்  என்.நிப்ரான் உட்பட அதன் உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க செயலாளர் கே. எம். எம். பர்மிளா உட்பட அதன் உறுப்பினர்கள், உலமாக்கள், மற்றும் பெற்றோர்கள் என பலரும்  கலந்து சிறப்பித்தனர்.


புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ள நிலையில்  வளமான நாட்டிற்குள் வளமான கல்வியை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
























Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال