JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் மணல்குன்று மக்களின் போதைப் பொருளுக்கு எதிரான எழுச்சி போராட்டம்

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புத்தளம் மணல்குன்று மஸ்ஜிதுல் சலாம் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சலாம் போதைப்பொருள் எதிர்ப்பு குழுவினரின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை(26) ஜூம்ஆ தொழுகையை அடுத்து பாரிய போதைப் பொருளுக்கு எதிரான எழுச்சி போராட்டம் ஒன்று இடம்பெற்றது


இந்த போதைப்பொருள் எதிர்ப்பு எழுச்சி போராட்டத்திற்க்கு சர்வமதத் தலைவர்கள் , பொலிஸ் அதிகாரிகள், முப்படையினர், சிவில் பாதுகாப்பு பிரிவினர் என சகல தரப்பினரினதும் ஆதரவு பெறப்பட்டிருந்ததுடன் மணல்குன்று, சம்மாந்தழுவை, கடையார்குளம் மற்றும் முல்லைநகர் என சகல அயல் கிராம மக்களும் இன் மத பேதமின்றி கலந்து கொண்டனர். 


எம் ஊர், எம் இளைஞர்கள், எம் பெருமை போதை இல்லாத மணல்குன்று கிராமத்தை உருவாக்குவோம், என்ற அடிப்படையில் புத்தளம் மணல்குன்று மஸ்ஜிதுல் சலாம் பள்ளிவாசல் நிர்வாகத் தலைவரும் மணல்குன்று சலாம் போதைப்பொருள் எதிர்ப்பு இயக்க குழு தலைவருமான அஷ்ஷெய்க் எம்.ஆர்.ஏம் முபாஸ் ( றஷாதி) அவர்களினால் சலாம் போதைப்பொருள் எதிர்ப்பு பிரகடனம் வாசிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال