JobVibe.lk - Sri Lanka Job Portal

YMMA பேரவையின் உயர்தர மாணவர் புலமைபரிசிலுக்கான நேர்முக தேர்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

அகில இலங்கை YMMA பேரவையின் ஏற்பாட்டில் ஆண்டு தோரும் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைபரிசில் நிதி வழங்கும் பொருட்டு எதிர்வரும் 2027 உயர்தர கல்வி ஆண்டில் கற்கும் மாணவர்களுக்குமான  நேர்முக தேர்வு சனிக்கிழமை (15) ஏறாவூர் அரபா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எம் எஸ் எம்.றிபாய்தீன் ஆசிரியரின் தலைமையில் ஏறாவூர் YMMA கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு முன்னாள் தேசிய தலைவர் அல்-ஹாஜ் ஹலீம் ஏ அஸீஸ் , புலமைப்பரிசில் நிதியத்தின் பொறுப்பாளர்கள் மகாரீம் தாஹா, அன்வர் சதாத், முன்னாள் மாவட்ட பணிப்பாளர் ஏ.பீ.எம் .இர்பான் ஆசிரியர், ஏறாவூர் YMMA கிளையின் தலைவர் எம் எஸ் எம்.பாரூக் , பாடசாலையின் பிரதி அதிபர் எம்.றிபாய் மற்றும் ஏறாவூர் YMMA கிளை உறுப்பினர்களான மௌலவி எஸ்.எச் சபூர்தீன், கிராம உத்தியோகத்தர் வீ.டி.எம்.பர்ஹான் , யூ.எல் ஹாஜா முகைதீன்,எம்.தஸ்லீம், மெளலவி அல் ஹாபீழ் அல் காரி  ஜே.இப்ராஸ் ,யூ.எல்..சுபைதீன் ,ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


இந் நேர்முக தேர்வுக்கு கல்குடா, காத்தான்குடி, ஏறாவூர் பிரதேசங்களில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال