JobVibe.lk - Sri Lanka Job Portal

சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம் (எம்.ஐ.சி.எச்) ஏற்பாடு செய்த 72 வது வருடாந்த மீலாதுன் நபி நிகழ்வும், பரிசளிப்பு விழாவும்.

எம்.யூ.எம்.சனூன்

சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம் (எம்.ஐ.சி.எச்) ஏற்பாடு செய்த 72 வது வருடாந்த மீலாதுன் நபி நிகழ்வும், நாடளாவிய ரீதியான பாடசாலை மாணவ மாணவிகளுக்கிடையே நடாத்திய குர்ஆன் மனனம், பேச்சு, கட்டுரை ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள், பணப்பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வெள்ளவத்தையில் உள்ள இஸ்லாமிய கலாச்சார நிலைய ஷேகா பாத்திமா கட்டிடத்தில் உள்ள மர்லீன் மண்டபத்தில் சனிக்கிழமை (15) இடம்பெற்றது.


அமைப்பின் தலைவர், முன்னாள் கொழும்பு மாநகர சபை முதல்வர் உமர் காமில் மற்றும் திருமதி சுரேகா காமில் ஆகியோர்கள் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வைத்தனர்.


இந்நிகழ்வில் பிரதான உரையை மருதானை ஜும்ஆப் பள்ளிவாசல் பிரதம இமாம்,  அல்ஹாஜ் மௌலவி எம்.எம். அஹமட்சா ஜமாலி பயாசி வழங்கினார்.


இங்கு சிங்கள மொழியில் வெற்றி பெற்ற சீதுவ சேலான் சர்வதேச கல்லூரியில் கற்கும் செல்வி ஆர்.பி.டபிள்யு.மிகரங்கி, நபி அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் ஸலவாத் சொல்வது பற்றியும் உரையாற்றினார்.


ஆங்கில மொழி மூலம் செல்வி அப்சின் ஆயிரா புத்தளம் பாத்திமா பாலிகா வித்தியாலயம் , தமிழ் மொழி மூலம் செல்வன் எம்.ஏ.ஏ. அலி பாணந்துரை அமபாலந்துவ இல்மா முஸ்லிம் வித்தியாலய மாணவன் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.


அத்துடன் அல் ஹாபிழ் மெளலவி ஏ.டப்ளியு ஆதில் துஆப் பிரத்தனையும் யாநபி ஸலவாத்தையும் மேற்கொண்டார்.


இந்நிகழ்வின் ஏற்பாடு மற்றும் மத நிகழ்வு குறித்து குழுவின் தலைவர் எஸ். முஹம்மது சாஷ்லி உரையாற்றினார்.


மீலாதுன் நபி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள், சோனக இஸ்லாமிய கலாச்சார நிலைய நிர்வாகிகள் மற்றும் அதன் மகளிர் உறுப்பினர்களும் இதில் கலந்து சிறப்பித்தனர்.















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال