அமேசன் கல்லூரி இயக்குனர் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி கனடா விஜயம்.
எம்.யூ.எம்.சனூன்
அமேசன் கல்லூரி இயக்குனர் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி, கனடாவிற்கான அதிகாரப்பூர்வ குழுவின் ஒரு உறுப்பினராக அண்மையில் விஜயம் செய்திருந்தார்.
இந்த பயணத்தின் போது, குழுவினர் Montreal, Quebec, Toronto, Saskatchewan, Regina, மற்றும் Vancouver நகரங்களில் நடைபெற்ற பல மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளில் பங்கேற்று, கல்வி மற்றும் வணிக துறைகளில் புதிய ஒத்துழைப்புகளை உருவாக்கினர்.
இயக்குனர் இல்ஹாம் மரைக்கார், Canada Bureau for International Education (CBIE) Expo நிகழ்வில் பங்கேற்று, பல்கலைக்கழக பிரதிநிதிகளுடன் கல்வி வாய்ப்புகள், உதவித்தொகைகள் மற்றும் மாணவர் பரிமாற்ற திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.
Saskatchewan மற்றும் Regina பல்கலைக்கழகங்களுக்கான விஜயங்களின்போது, கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இலங்கை மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தார்.
Montreal மற்றும் Toronto வில், இலங்கை வணிகர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களைச் சந்தித்து, இலங்கையில் முதலீடு செய்வதற்கும் சுற்றுலா மற்றும் வணிக வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் ஊக்கமளித்தார்.
இந்த சிறப்பான பயணத்தை ஒருங்கிணைத்த Ceylon Chamber of Commerce, Sri Lanka–Canada Business Council மற்றும் Canada–Sri Lanka Business Convention அமைப்புகளுக்கு கலாநிதி இல்ஹாம் மரைக்கார் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.








No comments