Breaking News

கற்பிட்டியில் ஆரம்பிக்கப்பட்ட புத்தளத்தின் பசுமைத் திட்டம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் மாவட்டத்தில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கோடு பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் எம் எஸ் எம் அனஸ் தலைமையில் புத்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள புத்தளம் பசுமைக் கழகம் ஊடாக கற்பிட்டியில் மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது


இதன்படி இம்முறை க. பொ. த. (உ/த ) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அவர்களின் பிரதேசங்களில் உள்ள பள்ளிவாயில்களில் நடுகை செய்வதற்காக நிலக்கடலை வெண்ணெய் பழ மரக்கன்றுகள் கற்பிட்டி YMMA (Y-128) கிளையினால் அதன் கிளைத் தலைவர் ஏ.எச்.எம்.எம் ஷாபி (ஓய்வு நிலை ஆசிரியர்) தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது


வழங்கப்பட்ட மரக்கன்றுகள் கற்பிட்டி புதுக்குடியிருப்பு சபா பள்ளிவாசலில் உயர் தர மாணவன் எம்.நுஸ்ரி, ஹுதா பள்ளிவாசலில் உயர் தர மாணவர்களான எம்.முஷாப், எம். அஷ்ரான், மஸ்ஜிதுல் மினன் ( கடற்கரை பள்ளிவாசல்) உயர்கல்வி மாணவன் எஸ்.எம் மில்ஹான், கண்டக்குளி ஜூம்ஆ பள்ளிவாசலில் பல்கலைக்கழகம் மாணவன் எம். பைசர், பள்ளிவாசல்துறை தெம்பிலிவத்தை பள்ளிவாசலில் உயர் தர மாணவன் எம் ஜபீஸ் ஆகியோரால் நாட்டப்பட்டதாக YMMA கற்பிட்டி கிளையின் செயலாளர் எம் என் எம் ஷிப்ராஸ் தெரிவித்தார்.









No comments