JobVibe.lk - Sri Lanka Job Portal

NPP அரசை மக்கள் காங்கிரஸ் புகழ்ந்துவந்த நிலையில் பட்ஜெட்டை ஏன் எதிர்த்தது ?

இன்றைய வட்ஜெட்டுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றபோது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அதேநேரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்த்து வாக்களித்துள்ளன. 


2026 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டபோது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உட்பட அதன் உறுப்பினர்கள் பாராட்டிப் பேசியநிலையில் வட்ஜெட்டை எதிர்க்கவில்லை. 


அதேநேரம் மக்கள் காங்கிரசின் கோரிக்கையின் பின்புதான் நிந்தவூர் கலாச்சார மண்டபத்துக்கு 300 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டதாக மக்கள் காங்கிரஸ் தலைவர் உட்பட பலரும் குறிப்பிட்டுள்ள நிலையில், பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களித்ததானது ஆச்சர்யமானதாக உள்ளது. 


கூட்டு எதிர்க்கட்சியில் செயற்பட்டுவரும் நிலையில், எதிர்கட்சியுடன் சேர்ந்து வட்ஜெட்டை எதிர்த்து வாக்களிக்காமல் தனித்துவமாக முஸ்லிம் காங்கிரஸ் நடுநிலை வகித்துள்ளது. 


ஆனால் கடந்த காலங்களில் ஆளும் NPP அரசாங்கத்தை புகழ்ந்துவந்த றிசாத் பதியுதீன் தலமையிலான மக்கள் காங்கிரசானது, சஜித் பிரேமதாசா தலமையிலான எதிர்கட்சிகளின் கூட்டணியுடன் சேர்ந்து வட்ஜெட்டை எதிர்த்து வாக்களித்ததானது ஓட்டமாவடி, நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளை கைப்பற்றுவதற்கு அந்த பிரதேசங்களில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் ஆதரவினை கோருவதற்கான நோக்கமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. 


முகம்மத் இக்பால்




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال