JobVibe.lk - Sri Lanka Job Portal

வென்னப்புவ வெல்லமங்கரை கடற்கரையில் 1500 கிலோகிராம் பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடலோர காவல்படையினருக்கு கிடைத்த சிறப்பு ரகசிய தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (14)   வென்னப்புவ வெல்லமங்கரை கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, 100 கிராம் எடையுள்ள முப்பத்து மூன்று (33) பைகளில் அடைக்கப்பட்ட 1531 கிலோகிராம் பீடி இலைகள், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருந்தன.


கடல் வழி கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடலோர காவல்படை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகள் காரணமாக கைவிடப்பட்டதாக நம்பப்படும் இந்த பீடி இலைகள், மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال