JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் சீனடிக் கலை போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்று சாதனை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் உயர்தர மாணவர்கள் அகில இலங்கை தேசிய மட்ட இஸ்லாமிய கலாசார போட்டி நிகழ்ச்சியில் சீனடிக் கலை போட்டியில முதலாம் இடத்தை பிடித்து தேசிய மட்டத்தில் சாதனையை நிலைநாட்டியுள்ளதுடன்  பாடசாலைக்கும் புத்தளத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் ஐ.ஏ நஜீம் தெரிவித்துள்ளனர் 


மேற்படி சீனடிக் கலையின் தேசிய மட்ட போட்டிகள் சனிக்கிழமை (01) கொழும்பு சாஹிரா தேசிய கல்லூரியில் இடம்பெற்றது. சீனடிக் கலையில் ஸாஹிரா தேசிய பாடசாலை சார்பில் உயர்தர மாணவர் குழுவினரகளான ஜே.சாஜித் (தலைவர்)… எம்.ஏ.எம் ஆதில், எம்.கே கைஸ், எம்.எச் ஹைதம் காசிம், எம் ஏ எம் அஸ்மத். எஸ்.எம் அர்ஷத், எம் எம் எம் முன்தீர், எம் ஆர் எம் றஹீக் ஆகிய மாணவர்களையும் பயிற்றுவித்து வெற்றி பாதைக்கு வழிகாட்டிய ஆசிரியர் எம்.ஏ.எம். சுபியான் ஆகியோருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பாடசாலையின் அதிபர் ஐ.ஏ. நஜிம் மேலும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال