எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட புழுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை (03) மிக விமரிசையாக இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ.எல்.எம். றிபாய்தீன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைஸல், விஷேட அதிதியாக புத்தளம் வலய கல்விப் பணி மனையின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.எம். அனீஸ், கௌரவ அதிதியாக புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம். நௌஸாத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.














