யூதர்களின் ஒப்பந்த மீறல்களும், அல்-குர்ஆன் கூறும் உண்மைகளும்.
இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறுவது புதிய விடயமல்ல. இது ஒப்பந்தம் செய்யப்படும்போது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றாகும். ஏனெனில் வரலாற்று ரீதியில் ஒப்பந்தங்களை மீறுவதென்பது யூதர்களுக்கே உரித்தான ஒன்று.
1948 இல் பாலஸ்தீனில் இஸ்ரேல் என்னும் நாடு உருவானதிலிருந்து இன்றுவரைக்கும் ஏராளமான யுத்தங்களும், சமாதான ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் எந்தவொரு ஒப்பந்தங்களையும் யூதர்கள் கடைப்பிடித்த வரலாறுகள் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த பின்பு அங்கிருந்த யூதக் கோத்திரங்களான பனூ கெய்நுகா, பனூ நதீர், பனூ குரைதா ஆகியோர்களுடன் ஒப்பந்தம் செய்தார்கள்.
அதில், வெளியிலிருந்து வரும் எதிரிகளிடமிருந்து மதீனாவை ஒன்றாகப் பாதுகாப்பது மற்றும் ஒருவருக்கு எதிராக ஒருவர் போர் செய்யக்கூடாது என்ற நிபந்தனைகள் இருந்தன.
ஆனால் பனூ கெய்நுகா என்ற யூத கோத்திரத்தினர் நபி அவர்களுக்கு எதிராக முதலில் சதிகளை செய்தனர். பனூ நதீர் கோத்திரத்தினர் நபி அவர்களை படுகொலை செய்ய முயன்றனர். பனூ குரைதா கோத்திரத்தினர் கந்தக் (அகழி) யுத்தத்தின் போது மக்கா காபீர்களுக்கு ரகசியமாக ஆதரவளித்தனர்.
இதன் காரணமாகவே கந்தக் யுத்தத்தின் பின்பு யூதர்களின் கைபர் கோட்டை சுற்றி வளைக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்களுக்கு முன்பாக வரலாற்று காலம்தொட்டு யூதர்களின் ஒப்பந்த மீறல்கள் பற்றி அல்-குர்ஆனின் அல்-பகரா, அல்-மாயிதா ஆகிய சூராக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நபி மூஸா அவர்கள் தனது சமூகத்தை எகிப்தில் பிர்அவ்நிடமிருந்து தப்பிப்பதற்காக கடலை பிளந்து காப்பாற்றிய பின்பு அல்லாஹ் அவர்களுக்கு தௌராத் வேதத்தை வழங்கினான். ஆனால் அதில் உள்ள சட்டங்களை மதிக்காமல் அதனை அவர்கள் மீறினார்கள்.
நபி மூசா (அலை) அவர்கள் சினாய் மலைக்கு சென்றபோது அவர்கள் பசு மாட்டினை செய்து வழிபட்டனர். இது அல்லாஹ்வுடன் செய்த ஒப்பந்தத்தின் மிகப் பெரிய மீறலாகும்.
மேலும், தௌராத் சட்டங்களை புறக்கணித்ததுடன், அதில் கொலை செய்யாதீர்கள், திருடாதீர்கள், ஒருவரை ஒருவர் வெளியேற்றாதீர்கள் என்ற ஒப்பந்தத்தையும் முற்றாக மீறிச் செயற்பட்டனர்.
நபி மூசா (அலை) அவர்களுக்கு பிறகு ஒவ்வொரு காலகட்டங்களில் யூதர்கள் மத்தியில் பல நபிமார்கள் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் சிலரை மறுத்தனர். இன்னும் சில நபிமார்களை கொலை செய்தனர்.
யூத சமூகத்தை பல முறை அல்லாஹ் தண்டித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதில் நாப்பது ஆண்டுகள் பாலைவனத்தில் இவர்களை அலையவிட்டதும் ஒன்றாகும்.
கடந்த நூற்றாண்டில் ஜெர்மனியில் ஐம்பது இலட்சத்துக்கு மேற்பட்ட யூதர்களை ஹிட்லர் கொலை செய்தார் என்பது பற்றி மாத்திரமே எல்லோராலும் பேசப்படுகின்றது. ஆனால் யூதர்களின் வரலாற்றில் உலகின் பல நாடுகளில் அவர்களது அநியாயச் செயற்பாடுகள் காரணமாக யூத சமூகத்தை அந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் கொலை செய்த வரலாறுகள் ஏராளமாக உள்ளது.
எனவேதான் ஒப்பந்தங்களை மீறுதல், துன்புறுத்துதல், கொலை செய்தல், சதி செய்தல், அடக்கி ஆழ முயற்சித்தல் போன்றன யூதர்களின் அடையாளமாக உள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் உலகம் அழியும் வரைக்கும் ஒருபோதும் மாறப்போவதில்லை.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments