Breaking News

புத்தளம், சமீரகமயைச் சேர்ந்த சிறுவன் சியாபின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி கோரல்

புத்தளம், சமீரகமயில் வசிக்கும் காலம் சென்ற அஸ்மி ராசிக்கின் மகன் அஹ்மத் சியாப் (10 வயது) இற்கு உடனடியாக அவசர  சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது. 


மிகுந்த கஷ்டத்துடன் தாயின் பராமரிப்பில் வாழும் அஹ்மத் சியாபின் 06 வயது சகோதரியான அபா ஸைனபும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உரிய காலத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ள்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


இந்நிலையில் சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வரும் அஹ்மத் சியாபிற்கு ஒரு வாரத்திற்குள் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.


இதற்கு சுமார் 41 இலட்சம் ரூபாய் அளவில் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  மிகவும் கஷ்டத்தில் இருக்கும் குறித்த குடும்பத்தினரால் இப்பாரிய தொகையை உடனடியாக திரட்ட முடியாமல் இருக்கிறது.


இந்த இக்கட்டான நிலையில் உங்களால் முடிந்த மேலான உதவிகளை தந்து உதவுமாறு குடும்பத்தினர் கேட்டுக் கொள்கிறார்கள்.


சிகிச்சை நடைபெறவுள்ள இடம்:

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை, வார்டு எண் 01, கொழும்பு.


எனவே  உங்களால் முடியுமான பண உதவிகளை செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.


அல்லாஹுத்தஆலா நம்மையும் அச்சகோதரனையும்  நாம் பயப்படக் கூடிய தீய நோய் நொடிகளில் இருந்தும், எல்லா விதமான கஷ்டங்களில் இருந்தும், பிரச்சினைகளில் இருந்தும் எம்மை பாதுகாப்பானாக!.


நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: “ஓர் அடியான் தன் சகோதரருக்கு உதவும் காலமெல்லாம் இறைவனும் அந்த அடியானுக்கு உதவிக்கொண்டே இருப்பான்”. (நூல்: முஸ்லிம்)


வங்கி கணக்கு விபரம்:

A.A.Sajana Banu

8636872

BOC 

Madurankuliya


தொடர்புகளுக்கு:

0770155033

0759009587






No comments