JobVibe.lk - Sri Lanka Job Portal

கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலய இரு மாணவிகள் மாகாண மட்டத்திற்கு தெரிவு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் மாவட்ட மட்டத்தில் இடம்பெற்று வரும் வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலய இரு மாணவிகள் ஈட்டி எறிதல் மற்றும் தட்டெறிதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம் பி எம் ஜெசின் தெரிவித்தார்.


கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 11 ல் கல்வி பயிலும் ஆர்.றீஹா 18 வயதின் கீழ் ஈட்டி எறிதல் மற்றும் தட்டெறிதல் போட்டியிலும் தரம் 12 ல் கல்வி பயிலும் எம்.எப் நப்ரீனா 20 வயதின் கீழ் ஈட்டி எறிதல் போட்டியிலும் வெற்றி பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுளாளனர்  இவர்களுக்கான விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் எஸ் ஐ எம் அம்ஜத் , எம்.அஹ்சப் ஆகிய இருவருக்கும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் ஊர் நலன் விரும்பிகள் சார்பாக தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال